பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்த 20 நாளில் ரூ.10 ஆயிரம் அபேஸ் செய்த தொழிலாளி கைது- கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது


பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்த 20 நாளில் ரூ.10 ஆயிரம் அபேஸ் செய்த தொழிலாளி கைது- கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது
x
தினத்தந்தி 14 Sept 2021 7:02 AM IST (Updated: 14 Sept 2021 7:02 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்த 20 நாளில் ரூ.10 ஆயிரம் அபேஸ் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தார்கள். அவர் திருட்டில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா மூலம் தெரிந்தது.

பெருந்துறை
பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்த 20 நாளில் ரூ.10 ஆயிரம் அபேஸ் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தார்கள். அவர் திருட்டில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா மூலம் தெரிந்தது. 
பெட்ரோல் பங்க்
பெருந்துறையில் உள்ள ஈரோடு ரோட்டில் வாய்க்கால் மேடு பகுதியில் பிச்சாண்டாம்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். 
இங்கு கோவையை சேர்ந்த குணசேகர் என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார். 
இந்த நிலையில் கடந்த மாதம் 20-ந் தேதி பவானி பழைய காடையம்பட்டியைச் சேர்ந்த வடிவேல் (வயது 39) என்பவர் பங்க்கில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். 
கடந்த 2-ந் தேதி இரவு 8.45 மணி அளவில் காசாளர் குணசேகர் வடிவேலிடம் கழிப்பறை செல்கிறேன். பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். 
ரூ.10 ஆயிரம்...
குணசேகர் திரும்பி வந்ததும் வடிவேல் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு குணசேகர் அன்ைறய விற்பனையை சரிபார்த்துள்ளார். அப்போது ரூ.10 ஆயிரம் குறைவாக இருந்துள்ளது. இதுபற்றி பங்க் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த கிருஷ்ணகுமார் பங்க்கில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார். 
கைது 
அப்போது குணசேகர் கழிப்பறை சென்ற நேரத்தில் வடிவேலு பங்க்கில் இருந்த பணப்பெட்டியை திறந்து ரூ.10 ஆயிரத்தை எடுத்து தனது பாக்கெட்டில் வைப்பது தெரிந்தது. 
இதுகுறித்து கிருஷ்ணகுமார் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்தார்கள். மேலும் அவரிடம் இருந்து, அவர் செலவு செய்தது போக எஞ்சிய ரூ.4 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தார்கள்.

Next Story