மாவட்ட செய்திகள்

கழுத்தில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் 10 நாட்களாக சாப்பிட முடியாமல் சுற்றித்திரிந்த நாய்- தீயணைப்பு வீரர்கள் மீட்டு அகற்றினர் + "||" + dog

கழுத்தில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் 10 நாட்களாக சாப்பிட முடியாமல் சுற்றித்திரிந்த நாய்- தீயணைப்பு வீரர்கள் மீட்டு அகற்றினர்

கழுத்தில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் 10 நாட்களாக சாப்பிட முடியாமல் சுற்றித்திரிந்த நாய்- தீயணைப்பு வீரர்கள் மீட்டு அகற்றினர்
கழுத்தில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் 10 நாட்களாக சாப்பிட முடியாமல் சுற்றித்திரிந்த நாய்- தீயணைப்பு வீரர்கள் மீட்டு அகற்றினர்
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று தெருவில் கிடந்த பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள உணவை சாப்பிடுவதற்காக தலையை விட்டு உள்ளது. உணவு சாப்பிட்ட பின்னர் அந்த நாய் தன்னுடைய தலையை அதில் இருந்து எடுக்க முயன்றது. ஆனால் டப்பாவுக்குள் மாட்டிய தலை வெளியே வரவில்லை. இதனால் நாய் தவித்தபடி ரோட்டில் அங்கும், இங்குமாக ஓடியது. இதையடுத்து கடந்த 10 நாட்களாகவே எந்த உணவையும் சாப்பிட முடியாமல் தெருவில் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்தது. நாயின் பரிதாப நிலையை கண்ட பொதுமக்கள் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடு்த்தனர். தகவல் கிடைத்ததும், நாயை தேடி தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நாயின் தலையில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவை நைசாக அகற்றினர். அப்போது நாய் மிகவும் சோர்வாக இருந்தது. உடனே அந்த நாய்க்கு  தீயணைப்பு வீரர்கள் பால் வாங்கி ஊற்றினர். பாலை குடித்ததும் நாய்க்கு சிறிது நேரத்தில் தெம்பு வந்தது. இதையடுத்து நாய் அங்கிருந்து சென்றது. நாயின் தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவை அகற்றி, அதன் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னிமலையில் கம்பி வேலிக்குள் சிக்கிய நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடிய மற்றொரு நாய்க்குட்டி
சென்னிமலையில் கம்பி வேலிக்குள் சிக்கிய நாய்க்குட்டியுடன் மற்றொரு நாய்க்குட்டிகொஞ்சி விளையாடியது.