புதிதாக 137 பேருக்கு கொரோனா; முதியவர் பலி


புதிதாக 137 பேருக்கு கொரோனா; முதியவர் பலி
x
தினத்தந்தி 14 Sept 2021 7:02 AM IST (Updated: 14 Sept 2021 7:02 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் முதியவர் ஒருவர் பலியானார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் முதியவர் ஒருவர் பலியானார். 
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் மாவட்டங்களில் ஈரோடு தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்தது. கடந்த 4 நாட்களாக தொற்று பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. மீண்டும் தொற்று பாதிப்பு உயர தொடங்வதுபோன்ற ஒருவித எண்ணம் உருவானது. இந்தநிலையில் நேற்று கொரோனா பாதிப்பு குறைந்து இருப்பது சற்று ஆறுதலை தருகிறது. நேற்று புதிதாக 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஒரு லட்சம் பேர்
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 99 ஆயிரத்து 954 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். தினமும் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியது. இதில் 98 ஆயிரத்து 20 பேர் குணமடைந்து உள்ளார்கள். நேற்று மட்டும் 121 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 1,269 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலியாகி உள்ளார். கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட 74 வயது முதியவர் கடந்த 13-ந் தேதி உயிரிழந்தார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 665 ஆக உயர்ந்தது.

Next Story