மாவட்ட செய்திகள்

காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிப்பு + "||" + elephant

காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிப்பு

காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிப்பு
காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்ெடருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் ஆசனூர் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. 
குறிப்பாக கடந்த சில மாதங்களாக தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே இந்த சாலையை யானைகள் கடப்பது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து அதில் கரும்புகளை பிடுங்கி தின்பதும் தொடர்கதையாகி வருகிறது. 
இந்நிலையில் நேற்று இரவு காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதிக்கு யானை ஒன்று வந்தது. பின்னர் அந்த யானையானது அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்தது. இதையடுத்து யானை அந்த சாலையில் அங்கும், இங்குமாக உலா வந்தது. இதன்காரணமாக சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. லாரியை வழிமறித்து முற்றுகையிட்ட யானைகள்
ஆசனூர் அருகே லாரியை வழிமறித்து முற்றுகையிட்ட யானைகள் துதிக்கையால் கரும்புகளை இழுத்து ருசித்து தின்றன.
2. காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானை
காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. குன்றி வனப்பகுதியில் குட்டையில் குளித்து கும்மாளமிட்ட யானைகள்
குன்றி வனப்பகுதியில் குட்டையில் குளித்து கும்மாளமிட்ட யானைகள்
4. பவானிசாகர் அணை பூங்கா அருகே முட்புதர் காட்டில் முகாமிட்ட யானைகள்; பொதுமக்கள் அச்சம்
பவானிசாகர் அணை பூங்கா அருகே முட்புதர் காட்டில் முகாமிட்ட காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
5. பர்கூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்; மக்காச்சோள பயிர் நாசம்- சரக்கு ஆட்டோவையும் சேதப்படுத்தியது
பர்கூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்த யானை மக்காச்சோள பயிரை நாசப்படுத்தியது. சரக்கு ஆட்டோவையும் சேதப்படுத்தியது.