அரசு அதிகாரி மீது ரூ.9 லட்சம் மோசடி புகார் போலீசார் விசாரணை


அரசு அதிகாரி மீது ரூ.9 லட்சம் மோசடி புகார் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Sept 2021 2:31 PM IST (Updated: 14 Sept 2021 2:31 PM IST)
t-max-icont-min-icon

அரசு அதிகாரி மீது ரூ.9 லட்சம் மோசடி புகார் போலீசார் விசாரணை.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நிர்வாக பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் மீது ரூ.9 லட்சம் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு துறையில் ஊழியர்களாக பணிபுரியும் 4 பேர் தங்களின் பிள்ளைகளுக்கு, அரசு நூலகத்துறையில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, இந்த மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் இதுபற்றி விசாரித்து வருகிறார். அரசு ஊழியர்களே, அரசு துறையில் வேலை கேட்டு பணம் கொடுத்து, இன்னொரு அரசு அதிகாரியின் மோசடி வலையில் வீழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story