குன்றத்தூர் அருகே திருட்டுத்தனமாக சவுடு மண் அள்ளிய 5 பேர் கைது


குன்றத்தூர் அருகே திருட்டுத்தனமாக சவுடு மண் அள்ளிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2021 8:45 PM IST (Updated: 14 Sept 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் அருகே திருட்டுத்தனமாக சவுடு மண் அள்ளிய 5 பேர் கைது 5 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்.

பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் திருட்டுத்தனமாக சவுடு மண் எடுப்பதாக வந்த தகவலையடுத்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முத்து மாதவன் மற்றும் குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர்.

அங்கு பெரிய லாரிகளில் திருட்டுத்தனமாக சவுடு மண் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரை கண்டதும் அங்கிருந்த கும்பல் நாலாபுறமும் தப்பி ஓடியது. அதில் சிலரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதில் 5 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் குன்றத்தூர், கெலடிபேட்டையை சேர்ந்த கமல் (வயது 35), நந்தம்பாக்கத்தை சேர்ந்த உசேன் (28), சீனிவாசன் (27), சக்தி (25), ஜான் (45), ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும் அனுமதி இல்லாமல் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மண் அள்ளியவாகனங்களின் உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story