மாவட்ட செய்திகள்

கோபி அருகே கொடிவேரி அணையில் திடீர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை + "||" + kodiveri dam

கோபி அருகே கொடிவேரி அணையில் திடீர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கோபி அருகே கொடிவேரி அணையில் திடீர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடத்தூர்
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
கொடிவேரி அணை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. 
நேற்று வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அருவிகளில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. 
குளிக்க தடை
கொடிவேரி அணைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். 
இந்தநிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் கொடிவேரியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  
இந்த தடை 15 நாட்களுக்கு நீடிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.       மேலும் கொடிவேரி பகுதியில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொடிவேரி அணையில் 5-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்குத் தடை
கொடிவேரி அணையில் தொடர்ந்து 5-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
2. கோபி அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கோபி அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
3. கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
4. கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
5. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கொடிவேரி அணையில் குளிக்க 10 நாட்கள் தடை
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கொடிவேரி அணையில் குளிக்க 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.