அறச்சலூர் முகாமில் இலங்கை அகதிகள் உள்ளிருப்பு போராட்டம்
அறச்சலூர் முகாமில் இலங்கை அகதிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
அறச்சலூர்
அறச்சலூர் முகாமில் இலங்கை அகதிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
இலங்கை அகதிகள்
ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 160 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு முகாமை சேர்ந்த 3 பேரை கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் போலீசார் அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி, நேற்று காலையில் இருந்து கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும், முகாமில் வசிப்பவர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
கோரிக்கை மனு
இதுபற்றி தகவல் அறிந்ததும், வருவாய் ஆய்வாளர் சாமுவேல், தனி தாசில்தார் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் அகதிகள் முகாமுக்கு சென்று அங்குள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
உங்களின் பிரச்சினைகளை மனுவாக எழுதி தாருங்கள், உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கூறினார்கள்.
இதையடுத்து இலங்கை அகதிகள் கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.
அதன்பின்னர் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
Related Tags :
Next Story