அந்தியூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி


அந்தியூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி
x
தினத்தந்தி 15 Sept 2021 2:51 AM IST (Updated: 15 Sept 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

அந்தியூர்
அந்தியூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. 
கோவில் நிலங்கள்
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் நிலங்கள் அளவீடு செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கோவில்களில் அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  அந்தியூர் தாலுகாவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 28 கோவில்கள் உள்ளன. இந்த 28 கோவில்களுக்கும் சேர்த்து 1,500 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றை அளவீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. 
ஆக்கிரமிப்புகள்
முன்னதாக அந்தியூர் கெட்டி விநாயகர் ேகாவிலுக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்யப்பட்டன. பவானி சங்கமேஸ்வரர் கோவில் அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சபர்மதி தலைமையில் தாசில்தார் பழனிச்சாமி, கோவில் செயல் அதிகாரி சரவணன், இந்துசமய துறை ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் அரசு நியமித்த நில அளவையாளர் கார்த்தி. ஹரிஷ், அருண் உள்ளிட்ட அதிகாரிகள் அளவீடு செய்தனர். அப்போது கோவில் நிலங்களில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டன. 
பத்ரகாளியம்மன் கோவில்
தொடர்ந்து அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில். பத்ரகாளியம்மன் கோவில், அழகராஜா பெருமாள் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பேட்டை பெருமாள் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில்களின் நிலங்கள் அளவீடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story