அந்தியூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு


அந்தியூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு
x
தினத்தந்தி 16 Sept 2021 3:30 AM IST (Updated: 16 Sept 2021 3:30 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் அழிக்கப்பட்டன.

அந்தியூர்
அந்தியூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் அழிக்கப்பட்டன.
மதுபாட்டில்கள்
தளர்வில்லாத கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. அப்போது வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் அதிக அளவில் கடத்தி வரப்பட்டன. இதேபோல் திருட்டுத்தனமாகவும் மதுவிற்கப்பட்டது. மது கடத்தியவர்களையும், விற்றவர்களையும் போலீசார் பிடித்து கைது செய்தார்கள். அப்போது பறிமுதல் ெசய்யப்பட்ட மதுபாட்டில்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. 
அழிப்பு
இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் அம்மாபேட்டை போலீசார் 3 ஆயிரம் மதுபாட்டில்களையும், அந்தியூர் போலீசார் 667 மதுபாட்டில்களையும், வெள்ளித்திருப்பூர் போலீசார் 280 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்திருந்தார்கள். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அந்தியூர் பெரிய ஏரி பகுதியில் அழிக்கப்பட்டது.
 கோபி கலால் தாசில்தார் ஷீலா, அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் மொத்தம் 3,947 மதுபாட்டில்கள் பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.10 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

Next Story