நடைபாதைகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை அகற்ற மாநகராட்சி, பெஸ்காமுக்கு 3 மாதம் கெடு - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


நடைபாதைகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை அகற்ற மாநகராட்சி, பெஸ்காமுக்கு 3 மாதம் கெடு - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Sep 2021 9:04 PM GMT (Updated: 16 Sep 2021 9:04 PM GMT)

பெங்களூருவில் நடைபாதைகளில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர்களை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் பெஸ்காமுக்கு 3 மாத காலம் கெடு விதித்து கா்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

டிரான்ஸ்பார்மர்களை அகற்ற...

  பெங்களூரு நகரில் நடைபாதைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் மின்சார டிரான்ஸ்பார்மர்கள் இருப்பதாகவும், இதனால் பாதசாரிகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே நடைபாதையில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.

  அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஸ் சந்திரசர்மா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பெஸ்காம் (மின்வாரியம்) சார்பில் வக்கீல் ஸ்ரீரங்கா ஆஜராகி வாதாடினார்.

3 மாதம் கெடு

  அவர் வாதிடும் போது, பெங்களூருவில் நடைபாதை மற்றும் பிற சாலைகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை அகற்றுவது குறித்து ஐகோர்ட்டில் ஏற்கனவே பெஸ்காம் சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 6-ந் தேதி மாநகராட்சி சிறப்பு கமிஷனர் மனோஜ் ஜெயின் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பெஸ்காம், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தாக்கல் செய்யப்படும் அறிக்கையின்படி டிரான்ஸ்பார்மர்களை அகற்றுவதற்கான அடுதத கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

  இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த தலைமை நீதிபதி சதீஸ் சந்திரசர்மா, நகரில் நடைபாதை, சாக்கடை கால்வாய்கள் மேல் இருக்கும் டிரான்ஸ்பார்மர்களை இன்னும் 3 மாதத்திற்குள் அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் பெஸ்காமுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story