சத்தியமங்கலம் அரசு பள்ளிக்கூட மாணவிக்கு கொரோனா
சத்தியமங்கலம் அரசு பள்ளிக்கூட மாணவிக்கு கொரோனா
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூட 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு் வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை எடுத்து கொண்டார். இதில் அந்த மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட 650 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மாணவி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. சோதனையின் முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரியவரும்.
Related Tags :
Next Story