திருவள்ளூர், கடம்பத்தூரில் இன்று மின்தடை
திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆகவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவள்ளூர் நகரத்திலுள்ள ஜே.என்.சாலை, பெரும்பாக்கம், ஐ.சி.எம்.ஆர் பின்புறம், சி.வி. நாயுடு சாலை, பூங்காநகர், ஐ.ஆர்.என்.பின்புறம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம், சேலை, ஏகாட்டூர், மேல்நல்லாத்தூர், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாளநகர், ஒண்டிகுப்பம், பாப்பரம்பாக்கம், ராமஞ்சேரி, கீழ்நல்லாத்தூர், இலுப்பூர், கொப்பூர், பட்டரைப்பெருமந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போல திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை அகரம், கடம்பத்தூர், புதுமாவிலங்கை, சத்தரை, காவாங்கொளத்தூர், பிரயாங்குப்பம், காரணி, விடையூர், திருப்பாச்சூர், ஆட்டுப்பாக்கம், நெமிலியகரம், செஞ்சிபனம்பாக்கம், மணவூர், பழையனூர், சின்னம்மா பேட்டை, சின்ன களக்காட்டூர், பெரிய களக்காட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story