தலையை துண்டித்து வாலிபர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது


தலையை துண்டித்து வாலிபர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2021 4:01 PM IST (Updated: 20 Sept 2021 4:01 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள எருமையூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 23). கடந்த செவ்வாய்க்கிழமை தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. வெற்றிவேல் கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேலும் 4 பேரை சோமங்கலம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த சுரேந்தர் (வயது 23), ஹரிஹரன் (20), ஹேம்நாத் (23), பிரசாந்த் (23) என்பது தெரியவந்தது. அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story