காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி குழந்தை சாவு


காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி குழந்தை சாவு
x
தினத்தந்தி 20 Sept 2021 4:07 PM IST (Updated: 20 Sept 2021 4:07 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

மின்சாரம் தாக்கியது
காஞ்சீபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர், ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கபிலேஷ் (வயது 3). வீட்டின் அருகே உள்ள பம்புசெட் அறையில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அருகில் இருந்த மின் இணைப்பு பெட்டியில் கபிலேஷ் கை வைத்துள்ளான். இதில் குழந்தை கபிலேஷ் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான்.

சாவு
ஆபத்தான நிலையில் இருந்த கபிலேஷை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story