தொழிலாளியை குத்திக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளியை குத்திக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தொழிலாளியை குத்திக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை
தினத்தந்தி 22 Sept 2021 10:26 PM IST (Updated: 22 Sept 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை குத்திக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் பாபு (வயது 40) தொழிலாளி. இவருடைய நண்பர் நெல்சன் (30). டான்ஸ் மாஸ்டர். 2 பேரும் கடந்த 23.8.2018 அன்று இரவு 9.30 மணியளவில் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் நின்று கொண்டு இருந்தனர். இந்த நிலையில் அங்கு சவுரிபாளையத்தை சேர்ந்த பூசாரி மணி (24) என்பவர் தலைமையில் ஒரு ரவுடி கும்பல் வந்தது.

 இந்த கும்பல் ஏற்கனவே சூலூர் பகுதியில் வழிப்பறி செய்துவிட்டு, மதுபோதையில் இந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் அங்கு நின்று கொண்டு இருந்த பாபுவையும், நெல்சனையும் கத்திமுனையில் மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

ஆனால் தங்களிடம் பணம் இல்லை என்று கூறியதும், பணம் இல்லாமல் ஏனடா? இங்கு வந்தீர்கள் என்று கூறி பூசாரி மணி மிரட்டியுள்ளார். அப்போது தொழிலாளி பாபு, மிரட்டினால் போலீசில் சொல்லுவோம் என்று கூறியுள்ளார். இதனால் பாபுவை விட்டால் போலீசில் போய் சொல்லிவிடுவார் என்று கருதி, பூசாரி மணியும், கூட்டாளிகளும் அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். 

இதனை பார்த்த நண்பர் நெல்சன் தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த பாபு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த கும்பல் பாபுவின் செல்போனையும் பறித்து சென்றது.
இதுதொடர்பாக பீளமேடு போலீசார் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.


 தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், பூசாரி மணி மற்றும் அவருடைய கூட்டாளிகளான உப்பிலிபாளையத்தை சேர்ந்த  ஹேப்பி ஆனந்தராஜ் (24), நவீன்குமார் (21), சசிமோகன் (25), மோகன் (30) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளிக்கும்போது, பாபுவை கொலை செய்யும் முன்பு தங்களுக்கு எதிராக விளங்கிய உன்னி கிருஷ்ணன் என்பவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு இருந்ததாகவும், பாபுவை கொலை செய்ததால் அந்த கொலை திட்டம் நடைபெற வில்லை என்றும் கூறினார்கள். 

மேலும் இந்த கும்பல் மீது பல குற்ற வழக்குகளும் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து கைதான 5 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜ், 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
1 More update

Next Story