பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து


பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 23 Sept 2021 12:06 AM IST (Updated: 23 Sept 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து


பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பணம் கொடுக்கல்&வாங்கலில் ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க. பிரமுகரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அ.தி.மு.க. பிரமுகர்

பொள்ளாச்சி பழனிசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ராஜா முகமது (வயது 40). இவர் அ.தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக உள்ளார். மேலும் சலுன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

 மேலும் குருமூர்த்தி, நந்தகுமார், ஜெலீல் ஆகியோர் ராஜாமுகமதுவின் நண்பர்கள் ஆவார்.

 இந்த நிலையில் இவர்களுக்குள் பணம், கொடுக்கல் வழங்கல் தொடர்பாக தகராறு இருந்து வருவதாக தெரிகிறது. ராஜா முகமதுவை 3 பேரும் பழனி கவுண்டர் வீதிக்கு அழைத்ததாக தெரிகிறது. 

அங்கு வைத்து மீண்டும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே 3 பேரும் சேர்ந்து ராஜாமுகமதுவை கத்தியால் உடலில் பல இடங்களில் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜாமுகமது கீழே சரிந்து விழுந்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதற்கிடையில் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜாமுகமது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய நகர கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார், குருமூர்த்தி, ஜெலீல் ஆகியோரை வலைவீசி தேடிவருகின்றனர். 


Next Story