எம்.ஆர்.சி. ராணுவ முகாம் முதலிடம்


எம்.ஆர்.சி. ராணுவ முகாம் முதலிடம்
x
தினத்தந்தி 23 Sept 2021 7:13 PM IST (Updated: 23 Sept 2021 7:13 PM IST)
t-max-icont-min-icon

எம்.ஆர்.சி. ராணுவ முகாம் முதலிடம்

குன்னூர்

கிராஸ் கன்ட்டிரி கோப்பைக்கான போட்டியில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் அணி வெற்றி பெற்றது.

ஓட்டப்பந்தயம்

இந்திய ராணுவத்தில் போர் பயிற்சி மட்டுமின்றி கடினமான உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தொலைதூர ஓட்டம், கால்பந்து, ஆக்கி போன்ற விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த போட்டிகளில் பங்கு பெற ரெஜிமெண்டுகளில் ராணுவ வீரர்கள் அடங்கிய தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் தக்க்ஷின் பாரத் ஏரியா ராணுவ பிரிவில் கிராஸ் கன்ட்ரி ஓட்டப்பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான தக்ஷின் ஏரியா கிராஸ் கன்ட்ரி 2021 கோப்பைக்கான ஓட்டப்பந்தயம் குன்னூர் அருகே உள்ள எம்.ஆர்.சி. ராணுவ முகாமிற்கு உட்பட்ட தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் தக்ஷின் பாரத் ஏரியாவின் 12 அணிகள் கலந்து கொண்டன. ஒவ்வாரு அணியிலும் 6 வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். 

ஓட்ட பந்தயத்திற்கான தூரம் 10 கிலோ மீட்டர் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. போட்டியை எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண்டென்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர்சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

எம்.ஆர்.சி. ராணுவ முகாம் முதலிடம்

போட்டியில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் அணி முதலிடம் பிடித்தது. ஹைதராபாத் ஆர்டில்லரி படை பிரிவு 2&ம் இடம் பெற்றது. தனி நபர் வரிசையில் 10 கிலோ மீட்டர் தூரத்தை எம்.ஆர்.சி. ராணுவ முகாம் அணியின் வீரர் அவில்தார் பரசப்பாஹலிஜோ 31 நிமிடங்கள் 36 நொடிகளில் கடந்து முதலிடம் பெற்றார். 

ஹைதராபாத் ஆர் டில்லரி அணியின் வீரர் நாயக் இமாவறித் ரத்தோர் 32 நிமிடங்கள் 50 நொடிகளில் கடந்து 2&ம் இடம் பெற்றார்.
இதையடுத்து பரிசளிப்பு விழா நடந்தது. இதற்க எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண்டெண்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர்சிங் தலைமை தாங்கிகோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். 

அவர் பேசும் போது எதிர்வரும் தென்பிராந்திய கிராஸ்கன்ட்ரி போட்டியை கருத்தில் கொண்டு கடினமான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார். விழாவில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் இசைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Story