கோவையில் மருத்துவ கழிவு கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம்
கோவையில் மருத்துவ கழிவு கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம்
கோவை
கோவை சிரியன் சர்ச் ரோடு அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மருத்துவ கழிவுகள்
கோவையில் மருத்துவக்கழிவுகள் சாலையோரத்தில் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நொய்யல் ஆற்றின் ஓரத்தில் கொட்டப்பட்டன. தற்போது கோவை சிரியன் சர்ச் ரோடு ஓரங்களில் மருத்துவ கழிவுகள், காலியான ஊசிகள் மற்றும் மருந்துகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.
அவை சுத்தம் செய்யப்படாததால் மிகக்கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியே செல்ல முடிவது இல்லை. அத்துடன் அந்தப்பகுதியில் உள்ளவர்களுக்கு பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவும் ஆபத்தும் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
உடனடி நடவடிக்கை
இந்தப் பகுதியில் தொடர்ந்து பல்வேறு விதமான சமூக விரோத செயல் நடைபெற்று வருகிறது. இரவு 8 மணிக்கு மேல் இந்த பகுதியில் மறைவில் நின்று மது குடிப்பது, மது பாட்டில்களை சாலையிலேயே போட்டு விட்டுச் செல்வது, முக்கியவீதி போல் அல்லாமல் இது ஒரு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் இந்த பகுதியில் தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தினம் தினம் பயத்துடனே இந்த பகுதியில் வசித்து வருகிறோம். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story