போட்டித்தேர்வுக்கு தயாராக ஆலோசனை வழங்கப்படும்


போட்டித்தேர்வுக்கு தயாராக ஆலோசனை வழங்கப்படும்
x
தினத்தந்தி 24 Sept 2021 7:13 PM IST (Updated: 24 Sept 2021 7:13 PM IST)
t-max-icont-min-icon

போட்டித்தேர்வுக்கு தயாராக ஆலோசனை வழங்கப்படும்

ஊட்டி

சுதந்திர தினத்தையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கோவை மண்டல அலுவலகம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதம், கொரோனா தடுப்பூசி விழா, உலக சுற்றுலா தின விழா ஆகிய முப்பெரும் விழா ஊட்டி அருகே பகல்கோடுமந்து சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு சென்னை மண்டல இயக்குனர் காமராஜ் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது

தற்போதைய கால கட்டத்திலும் பழங் குடியின மக்கள் தங்களின் பாரம் பரியம் மாறாமல் வாழ்வது பாராட்டத் தக்கது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பழங்குடியின மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மத்திய அரசு பணிகளில் பழங்குடியினருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளது.

 எனவே மத்திய அரசு பணிகளில் சேர பழங்குடியின மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ஆலோசனை வழங்கப்படும். வாழ்வில் மேம்பட வேண்டும். 

ஊட்டி யின் காடுகளை காப்பதில் பழங்குடியினரின் பங்கு முக்கியமானது. 
இவ்வாறு அவர் கூறினார். இதையொட்டி ஊட்டச்சத்து உணவு பொருட்கள் கண்காட்சி நடந்தது. 

Next Story