பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
x
பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
தினத்தந்தி 24 Sept 2021 9:45 PM IST (Updated: 24 Sept 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு


கோவை

கோவை பீளமேடு ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (வயது 45) . இவர் நேற்று காலை 6 மணியளவில் அதே பகுதியில் நடைபயிற்சி சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் முகக்கவசம் அணிந்தபடி வந்த மர்ம ஆசாமி ஒருவர் வளர்மதியின் கழுத்தில் அணிந்து இருந்த 12 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தங்கச்சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு மர்ம ஆசாமியிடம் போராடினார்.  இதில் தங்க சங்கிலியின் கால் வளர்மதி கையிலும், முக்கால் பகுதி (10 பவுன் சங்கிலி) மர்ம ஆசாமி வசமும் இருந்தது. 

முடிவில் அந்த முக்கால் பகுதி நகையை பறித்துக்கொண்டு ஆசாமி தப்பி சென்று விட்டான். இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா ஆட்சிகளில் மர்ம ஆசாமியின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 

Next Story