சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை குற்றாலம் திறப்பு


சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை குற்றாலம் திறப்பு
x
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை குற்றாலம் திறப்பு

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை குற்றாலம் திறப்பு



கோவை

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவை குற்றாலம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மூடப்பட்டு இருந்தது. அன்றைய நாட்களில் பொதுமக்கள் கோவை குற்றாலத்தில் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சனி, ஞாயிற்று கிழமைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கி உத்தரவிட்டார். 

இதையடுத்து கோவை குற்றாலம் இனி வரும் நாட்களில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் கூறியதாவது:-
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலா பயணிகளுக்காக தற்போது திறக்கப்பட்டு உள்ளது. 


ஆனால் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உத்தரவிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கோவை குற்றாலத்தில் இனிவரும் நாட்களில் சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். 

ஆனால் நாள் ஒன்றுக்கு 1, 000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்துவர அனுமதிக்கப்படுவர். இனி வரும் நாட்களில் வாரத்தில் திங்கட்கிழமைகளில் வார விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அன்றைய தினம் கோவை குற்றாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story