தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குவிந்து கிடக்கும் குப்பை
மதுக்கரை ரோடு அன்னை இந்திரா நகர் முதல் வீதியில் சாலை ஓரத்தில் ஏராளமான குப்பைகள் மலைபோன்று தேங்கி கிடக்கிறது. இதனால் இங்கு தெருநாய்கள் அதிகளவில் கூடுவதுடன், அந்த குப்பைகளை சாலைக்கு கொண்டு வந்து விடுகிறது.
அத்துடன் காற்று வீசும்போது குப்பைகள் வீடுகளுக்கும் வந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
மனோகரன், குறிச்சி.
தார்சாலை போடப்படுமா?
கோவை உப்பிலிபாளையயத்தில் உள்ள தனியார் பள்ளி தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டது. பின்னர் வேலை முடிந்ததும் சாலை போடவில்லை. இதனால் அங்கு குண்டும் குழியுமாக இருப்பதுடன், சாலையில் மண் அதிகமாக குவிந்து இருப்பதால் புழுதி பறக்கிறது.
இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே உடனடியாக தார்சாலை போட வேண்டும்.
குமரன், உப்பிலிபாளையம்.
சீரான குடிநீர் வேண்டும்
கோவை இடையர்பாளையம் ராமலட்சுமி நகர் 1 மற்றும் 2&வது வீதியில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுவது இல்லை. வாரத்துக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படுவதால், பொதுமக்கள் குடிநீருக்காக பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
அதுபோன்று ஆழ்துளை கிணறு தண்ணீரும் வருவது இல்லை. பற்றாக்குறை யால் தண்ணீரை தேடி அலையும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும்.
உமா மகேஸ்வரி, இடையர்பாளையம்.
சாலையின் நடுவே குழி
பேரூர்-செல்வபுரம் சாலையில் எப்போதுமே வாகனங்கள் அதிகவில் செல்லும். இந்த சாலையில் செல்வபுரம் எல்.ஐ.சி. பஸ்நிறுத்தம் அருகே 3 சந்திப்பு உள்ளது. இதன் நடுவில் சாக்கடை குழி உள்ளது. அது மூடாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜய், செல்வபுரம்.
கட்டிட பணி முடிவது எப்போது?
பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இங்கு பிரேத பரிசோதனை கட்டிடம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் அஸ்திவாரம் போட்டதுடன் நிற்கிறது.
இதனால் பணிகள் எப்போது தொடங்கி முடிவடையும் என்பது தெரியவில்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பணிகளை வேகப்படுத்தி விரைவில் முடிக்க வேண்டும்.
அருணாசலம், ஜோதிபுரம்.
பராமரிக்கப்படாத கழிவறை
கோவை நீலகிக்கோணாம்பாளையம் இருந்து எம்.ஜி.ஆர். நகர், செட்டியார் தோட்டம் பகுதியில் பொது கழிவறை உள்ளது. அவை முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அத்துடன் அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் சென்று விடுகிறது.
இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
நாகராஜ், நீலிக்கோணாம்பாளையம்.
வேகத்தடை வேண்டும்
குன்னூர் அருகே உள்ள அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மற்றும் அதன் அருகே உள்ள ஆஸ்பத்திரி சாலையில் வேகத்தடுப்பு இல்லை.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு விபத்துகள் நடப்பதை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்.
ராஜேஷ் கோபால், அரவங்காடு.
திறந்து கிடக்கும் சாக்கடை
கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள குடிநீர் குழாய் அருகே சாக்கடை செல்கிறது. அதன் மீது கான்கிரீட் போடாததால் திறந்து கிடக்கிறது.
எனவே அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் சிரமத்துடன் தண்ணீர் பிடித்துச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனே அந்த சாக்கடை கால்வாயில் மூடி அமைக்க வேண்டும்.
ராமசாமி, சோமனூர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு
கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு முன்பு உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் சாலையில் இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
மணிகண்டன், ராமநாதபுரம்.
தூசி பறக்கும் சாலை
பொள்ளாச்சி மார்க்கெட் முதல் ரெயில் நிலையம் செல்லும் சாலை, தார்சாலையாக மாற்ற ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் அதன் பின்னர் அங்கு தார்சாலை போட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கரடு முரடாக இருப்பதுடன், அதிகளவில் தூசியும் பறக்கிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே உடனடியாக அங்கு தார்சாலை அமைக்க வேண்டும்.
முருகன், பொள்ளாச்சி.
கோழிக்கழிவுகளால் அவதி
பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் பெரியா கவுண்டனூர் உள்ளது. இங்கு சாலை ஓரத்தில் குப்பைகள் மற்றும் ஏராளமான இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அவற்றை சுத்தம் செய்வதுடன், அங்கு கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
கண்ணன், பெரியாகவுண்டனூர்.
Related Tags :
Next Story