பொள்ளாச்சி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது


பொள்ளாச்சி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 24 Sept 2021 11:21 PM IST (Updated: 24 Sept 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது


நெகமம்

பொள்ளாச்சி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது. இதில் தம்பதி உயிர் தப்பினர். 

தொகுப்பு வீடு

பொள்ளாச்சி அருகே உள்ள ஏ.நாகூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.நாகூர் கிராமத்தில் தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இந்த வீடுகளில் பலர் வாழ்ந்து வருகிறார்கள். 

இதில் ஒரு வீட்டில் நாகப்பன் (வயது 73), அவருடைய மனைவி மாராள் (70) ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஆடுகளை வளர்த்து அவற்றை மேய்த்து வருகிறார்கள். இவர்கள் வசித்து வரும் வீடு பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.

இடிந்து விழுந்தது 

இந்த நிலையில் கணவன்மனைவி 2  பேரும் வீட்டின் அருகே உள்ள ஆட்டுப்பட்டிக்கு சென்றனர். அங்கு ஆடுகளை கவனித்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று அவர்கள் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. 

அப்போது 2 பேரும் வீட்டில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் வீட்டில் இ?ருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். 

இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது-:

சரிசெய்ய வேண்டும்

எங்கள் பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டு கள் ஆகிவிட்டதால் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இங்கு இருப்பவர்கள் அனைவருமே கூலி வேலைதான் செய்து வருவதால் அந்த வீடுகளை சரிசெய்ய முடியவில்லை. 

எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதடைந்த வீடுகளை சரிசெய்ய வேண்டும். இல்லை என்றால் நாங்கள் குடியிருக்க மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story