அரசு பஸ் -சரக்கு வாகனம் மோதல்


அரசு பஸ் -சரக்கு வாகனம் மோதல்
x
தினத்தந்தி 25 Sept 2021 2:48 AM IST (Updated: 25 Sept 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் -சரக்கு வாகனம் மோதல்

மதுரை
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் நோக்கி ஒரு அரசு பஸ் சென்றது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ், வரிச்சியூர் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இதில் அந்த அரசு பஸ், அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ் மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story