இளம்பெண் தற்கொலை
இளம்பெண் தற்கொலை
துடியலூர்
கோவை அருகே உள்ள இடையர்பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் மைதிலி (வயது 30). இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் மைதிலிக்கு உறவினரான சரவணகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது.
அவர் மனைவியை கண்டித்தார். ஆனால் மைதிலி கடந்த 18&ந் தேதி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கடந்த 20&ந் தேதி மீண்டும் அழைத்து வந்தனர்.ஆனால் கள்ளக்காதலன் பிரிந்த ஏக்கத்தில் மைதிலி இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மைதிலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Related Tags :
Next Story