ரூ.13 லட்சம் நகை பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்
தையல் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.13 லட்சம் நகை பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்
கோவை
கோவை தெற்கு குனியமுத்தூர் பிருந்தவன் சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் முபாரக் அலி (வயது 48). இவர் சாரமேட்டில் தையல் கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி பாத்திமா சப்னா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சப்னாவின் தாயார் இறந்து முதலாவது நினைவுநாள் கடந்த 23ந்தேதி கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி கரும்புக்கடையில் உள்ள சப்னாவின் தந்தை வீட்டில் நடந்தது. இதில் கலந்துகொள்ள முபாரக் அலி குடும்பத்துடன் மாமனார் வீடடுக்கு சென்றுவிட்டார்.
பின்னர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கேட் அடைக்கபட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கபட்டிருந்தது. வீட்டு பீரோவில் இருந்த 33 பவுன் தங்க நகைகள், 3 லட்சத்து 22 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு ரேடோ கைக்கடிகாரம் ஆகியவை திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ 13 லட்சம் ஆகும்.இதுகுறித்து முபாரக் அலி குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட திருட்டு ஆசாமிகள் முபாரக் அலிவீட்டின் பின்பக்கம் உள்ள காலி நிலம் வழியாக சுவர் ஏறி குதித்து இந்த கைவரிசையை காட்டியுள்ளனர்.
Related Tags :
Next Story