பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பொள்ளாச்சி
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கரிவரதராஜ பெருமாள்
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு பால், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 9 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் நேரடி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கவில்லை.
பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பத்மாவதி சமேத வெங்கடாசலபதி மற்றும் சீதாதேவி, ராமருக்கு உணவு பரிமாறுவது போன்று அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
அதே பகுதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவில் குருவாயூரப்பன் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆனைமலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ரோஜா, மல்லிகை, செவ்வந்தி உள்பட 16 வகையான மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் கோவிலுக்கு செல்லும் வழியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று குளத்துப்புதூர் பூமிநீளா சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story