மத்திய ரிசர்வ் படையினருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி


மத்திய ரிசர்வ் படையினருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
x
தினத்தந்தி 26 Sept 2021 12:55 AM IST (Updated: 26 Sept 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படையினருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி

ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படையினருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

போலீசாருக்கு பயிற்சி

கோவை அருகே கதிர்நாயக்கன்பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.

பயிற்சி கல்லூரி கமாண்டோ ராஜேஷ்குமார் தலைமையில் 11 பயிற்சியாளர்கள் 65 வீரர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகளை அளித்தனர். மழை, வெள்ள காலங்களில் பொதுமக்களை எப்படி மீட்டு கொண்டு வருவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் டிரம்ப், கேன் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு உருவாக்கப்பட்ட படகில் அணையின் மைய பகுதிக்கு சென்று, அங்கு நீரில் தத்தளிக்கும் ஒருவரை மீட்டு, கரைக்கு வருவது போன்று தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.

முதலுதவி சிகிச்சை

மேலும் அவர்களை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளித்தனர். இதுகுறித்து சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் கூறுகையில், மத்திய ரிசர்வ் படையில் அதிவிரைவுப்படை பிரிவு வீரர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

அவர்களுக்கு இயற்கை பேரிடர் காலங்களில் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட படகு மற்றும் ரப்பர் படகு மூலம் சென்று மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்தும், முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. குழுக்களாக பிரித்து 65 பேருக்கு பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர் என்றனர். இதில் துணை கமாண்டோ பிரவீதர்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story