திருவொற்றியூர் அரசு ஆஸ்பத்திரியில் செவித்திறன் குறைபாடுகளுக்கான மருத்துவ முகாம்


திருவொற்றியூர் அரசு ஆஸ்பத்திரியில் செவித்திறன் குறைபாடுகளுக்கான மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 26 Sept 2021 3:20 PM IST (Updated: 26 Sept 2021 3:20 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் அரசு ஆஸ்பத்திரியில் செவித்திறன் குறைபாடுகளுக்கான மருத்துவ முகாம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு.

திருவொற்றியூர்,

உலக காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் அரசு ஆஸ்பத்திரியில் செவித்திறன் குறைபாட்டுக்கான சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் காது கேட்கும் கருவிகள் இலவசமாக வழங்குவதற்காக பரிசோதனைகள் நடைபெற்றன. முகாமை திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் தொடங்கி வைத்தார்.

கொரோனா காரணமாக எந்த மருத்துவ முகாமும் நடைபெறாததால் திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்டோர் இந்த முகாமில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்பதிவு செய்த பின்னர் செவி நரம்பு குறைபாடு உள்ளவர்களுக்கு ஆடியோ கிராம் பரிசோதனை செய்யப்பட்டு செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் செவித்திறன் கருவிகள் வழங்கப்படுகிறது. முகாமில் பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, டாக்டர்கள் வசந்தி, மனோஸ் குமார் உள்பட மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

Next Story