புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 Sept 2021 7:31 PM IST (Updated: 26 Sept 2021 7:31 PM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
மதுரை மாநகராட்சி 53-வது வார்டு பங்கஜம் காலனி 1-வது தெருவில் சிறிய மழை பெய்-தா-லும் சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலைகளில் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் துர்நாற்-றம் வீசு-கி-றது. கொசுத்-தொல்-லை-யும் அதி-க-மாக உள்-ளது. இத-னால் பொது-மக்க-ளுக்கு தொற்-று-நோய் பர-வும் அபா-யம் உள்-ள-ளது. இது-கு-றித்து சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் உரிய நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும். 
கன-க-ரா-ஜன், மதுரை. 

குடிநீர் பிரச்சினை
ராம-நா-த-பு-ரம் மாவட்-டம் வண்-ணாங்-குண்டு ஊராட்-சி-யில் ஏரா-ள-மான குடும்-பத்-தி-னர் வசித்து வரு-கின்-ற-னர். இப்-ப-கு-தி-யில் வினி-யோ-கம் செய்-யப்-ப-டும் குடி-நீர் உப்பு தண்-ணீ-ராக உள்-ளது. இத-னால் பொது-மக்கள் அந்த தண்-ணீரை பயன்-ப-டுத்த முடி-யாத நிலை காணப்-ப-டு-கி-றது. குடி-நீர் பிரச்-சி-னை-யால் பொது-மக்கள் கடும் சிர-மத்-திற்கு உள்-ளா-கின்-ற-னர். மேலும், குடி-நீரை ஒரு குடம் பத்து ரூபாய் என்ற விலை-யில் வாங்கி பயன்-ப-டுத்-து-கி-றார்கள். பொது-மக்க-ளின் நலன்க-ருதி இப்-ப-கு-தி-யில் குடி-நீர் பிரச்-சி-னையை போக்க நட-வ-டிக்கை எடுப்-பார்களா?
பொது-மக்கள், வண்-ணாங்-குண்டு. 

சாலை வசதி தேவை
கள்-ளி-குடி வட்-டம் தி. கொக்கு-ளம் 6&வது வார்டு பகு-தி-யில் ஏரா-ள-மான குடும்-பத்-தி-னர் வசித்து வரு-கின்-ற-னர். இப்-ப-கு-தி-யில் கடந்த சில ஆண்-டு-க-ளாக சாலை வசதி இல்லை. இதன் கார-ண-மாக பொது-மக்கள் கடும் சிர-மத்-திற்கு உள்-ளாகி வரு-கின்-ற-னர். மழைக்கா-லங்க-ளில் இந்த சாலை சேறும், சக-தி-யு-மாக பொது-மக்கள் பயன்-ப-டுத்த முடி-யாத நிலை-யில் உள்-ளது. எனவே, இப்-ப-கு-தி-யில் சாலை வசதி செய்து கொடுக்க அதி-கா-ரி-கள் நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும். 
பொது-மக்கள், தி.கொக்கு-ளம். 

நாய்கள் அட்டகாசம் 
சிவ-கங்கை மாவட்-டம் தேவ-கோட்டை வெள்-ளை-யன் ஊரு-ணியை சுற்-றி-யுள்ள பகு-தி-யில், அதி-லும் குறிப்-பாக வடக்கு தெரு-வில் நாய்-கள் ஏரா-ள-மாக சுற்றி திரி-கின்-றன. பக-லி-லும், இர-வி-லும் கூட்-டம், கூட்-ட-மாக சுற்-றும் தெரு நாய்-க-ளால் பொது-மக்கள் அச்-சத்-தில் உள்-ள-னர். இரு-சக்கர வாக-னங்க-ளில் செல்-ப-வர்களை நாய்-கள் துரத்-தும் போது அவர்கள் நிலை-த-டு-மாறி கீழே விழுந்து காயம் அடை-கின்-ற-னர். நாய்-களின் அட்-ட-கா-சத்-தால் பொது-மக்கள் வெளி-யில் செல்-லவே அச்-சம் அடை-கின்-ற-னர். எனவே, நாய்-கள் தொல்-லையை கட்-டுப்-ப-டுத்த நக-ராட்சி நிர்-வா-கம் நட-வ-டிக்கை எடுக்குமா?
அழகு, தேவ-கோட்டை. 

சாக்கடை கால்வாய் வேண்டும் 
மதுரை மாந-க-ராட்சி 3-வது வார்டு கருப்-ப-சாமி நகர் 2&வது தெரு-வில் ஏரா-ள-மான குடும்-பங்கள் வசித்து வரு-கின்-றன. இங்கு வீடு-களில் இருந்து வரும் கழி-வு-நீர் சாலை-யில் தேங்கி குளம்-போல் காட்சி அளிக்கி-றது. இத-னால் டெங்கு, மலே-ரியா போன்ற காய்ச்-சல்கள் பர-வும் அபா-யம் உள்-ளது. துர்-நாற்-றம் கார-ண-மாக சுகா-தார சீர்-கே-டா-க-வும் உள்-ளது. பொது-மக்கள் நலன் கருதி இப்-ப-கு-தி-யில் உள்ள கழி-வு-நீரை அகற்றி சாக்கடை வசதி அமைக்க வேண்-டும்.
பிரபாக-ரன், கருப்பசாமி நகர். 

பஸ்கள் இயக்கப்படுமா?
சிவ-கங்-கை-யில் இருந்து திருப்-பு-வ-னம் வழி-யாக சொக்க-நா-தி-ருப்-புக்கு தின-மும் 4 வேளை-களில் பஸ்-கள் இயக்கப்-பட்டு வந்-தது. கொரோனா தொற்று கார-ண-மாக இப்-ப-கு-திக்கு ஒரு வேளை மட்-டுமே பஸ்-கள் இயக்கப்-பட்டு வரு-கி-றது. தற்-போது தொற்று படிப்-ப-டி-யாக குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி வரு-வ-தால் மீண்-டும் முன்பு போல் பஸ்-கள் இயக்க வேண்-டும். 
கோபால், சொக்க-நா-தி-ருப்பு.
எரியாத தெருவிளக்குகள் 
விரு-து-ந-கர் மாவட்-டம் நரிக்குடி ஊராட்-சிக்கு உட்-பட்ட நரிக்குடி விலக்கில் இருந்து ஆதித்-த-னேந்-தல் கால-னிக்கு செல்-லும் வழி-யில் உள்ள மின் கம்-பங்க-ளில் மின் விளக்குகள் எரி-ய-வில்லை. இதன் கார-ண-மாக இரவு நேரங்க-ளில் பெண்-களும், சிறு-வர், சிறு-மி-களும் வெளி-யில் செல்ல அச்-சம் அடை-கின்-ற-னர். இருட்டை பயன்-ப-டுத்தி சமூக விரோ-தி-கள் திருட்டு உள்-ளிட்ட பல்-வேறு குற்ற சம்-ப-வங்க-ளில் ஈடு-பட வாய்ப்பு உள்-ளது. இது-கு-றித்து அதி-கா-ரி-கள் நட-வ-டிக்கை எடுப்-பார்களா?
ராம-நா-தன், நரிக்குடி. 

உடைந்த இருக்கைகள் 
மதுரை மாவட்-டம் பழங்கா-நத்-தத்-தில் சார் பதி-வா-ளர் அலு-வ-ல-கம் உள்-ளது. இங்கு பத்-தி-ரப்-ப-திவு செய்ய தின-மும் ஏரா-ள-மான பொது-மக்கள் வந்து செல்-கின்-ற-னர். இங்கு வரு-ப-வர்க-ளின் வச-திக்காக அவர்கள் அம-ரும் வகை-யில் இருக்-கை-கள் அமைக்கப்-பட்-டுள்-ளன. தற்-போது அந்த இருக்-கை-கள் அனைத்-தும் உடைந்து காணப்-ப-டு-கி-றது. இத-னால் பொது-மக்கள் நீண்ட நேரம் நிற்க வேண்-டிய நிலை உள்-ளது. இத-னால் வய-தா-ன-வர்கள் சிர-மப்-ப-டு-கின்-ற-னர். எனவே, உடைந்த இருக்-கை-களை அகற்-றி-விட்டு புதிய இருக்-கை-கள் அமைக்க வேண்-டும். 
மோகன், பழங்கா-நத்-தம்.

சேதமடைந்த பள்ளி கட்டிடம் 
ராம-நா-த-பு-ரம் மாவட்-டம் தேவி-பட்-டி-னம் கிரா-மத்-தில் அரசு ஊராட்சி ஒன்-றிய தொடக்க பள்ளி செயல்-பட்டு வரு-கி-றது. இங்கு சுற்று வட்-டார பகு-தி-களை சேர்ந்த மாணவ, மாண-வி-கள் படித்து வரு-கின்-ற-னர். இப்-பள்ளி கட்-டி-டம் தற்-போது சிதி-ல-ம-டைந்து மோச-மான நிலை-யில் உள்-ளது. பள்ளி கட்-டி-டத்-தின் சுவர்க-ளும், மேற்கூரைகளும் ஆங்காங்கே இடிந்து விழுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு புதிய பள்ளி கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?
முஹம்மது ஹனீப், தேவிப்பட்டி-னம். 

உதவித்தொகை வருமா? 
மதுரையில் உள்ள சோலையழகுபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்-தில் பதிவு செய்த கர்ப்பிணிகளுக்கு அரசின் உதவித்தொகை மற்றும் பரிசு பெட்டகம் சரிவர கிடைப்பதில்லை. பெரும்பாலானோ-ருக்கு 2-ம் தவணை தொகையும் வங்கிக்கணக்கில் வந்து சேரவில்லை. இதுகுறித்து கேட்டாலும் சம்பந்தப்பட்ட துறை-யி-டம் இருந்து இன்-னும் பணம் ஒதுக்கீடு ஆக-வில்லை என ஊழி-யர்கள் தெரி-விக்கி-றார்கள்.  எனவே உத-வித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 
பொதுமக்கள், சோலையழகுபுரம். 



Next Story