ஆனைமலை ஒன்றியத்தில் 7 கிராமங்கள் தேர்வு
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ஆனைமலை ஒன்றியத்தில் 7 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ஆனைமலை ஒன்றியத்தில் 7 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிராமங்கள் தேர்வு
தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஆனைமலை ஒன்றியத்தில் தென்சித்தூர், சோமந்துறைசித்தூர், அர்த்தநாரிபாளையம், கரியாஞ்செட்டிபாளையம், பில் சின்னாம்பாளையம், காளியாபுரம், தென் சங்கம்பாளையம் ஆகிய 7 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த கிராமங்களில் தற்போது தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் தரிசு தொகுப்பு அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக 5 முதல் 10 ஏக்கர் பரப்பளவில் அல்லது 10 முதல் 35 ஏக்கர் பரப்பளவில் குறைந்தபட்சம் 8 விவசாயிகளை தேர்வு செய்து வருகின்றனர். இவர்களுக்கு தரிசு நிலங்களை மேம்படுத்தி பயிர் சாகுபடி மேற்கொள்ள மானியங்கள் வழங்கப்படுகிறது.
வங்கிகள் மூலம் கடனுதவி
ஒரு ஹெக்டேருக்கு ரூ.12,500 மானியத்தில் உரம், இடுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் விவசாயிகள் அடங்கிய குழு அமைத்து வேளாண் பொறியியல் துறை சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தரப்படுகிறது. தோட்டக்கலை, வேளாண்மை துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட 20 துறைகளிள் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஆனைமலை ஒன்றியத்தில் 500 ஹெக்டேருக்கு மானாவாரி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 200 ஹெக்டேர் தேர்வு செய்யப்பட்டு உள்ள 7 கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. உழவு மானியம், மானாவாரி பயிர் சாகுபடி மானியம், இடுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தடுப்பணைகள் கட்டுதல், தீவன பயிர், வங்கிகள் மூலம் கடனுதவி, கால்வாய் தீர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story