5 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்


5 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்
x
5 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்
தினத்தந்தி 26 Sept 2021 9:22 PM IST (Updated: 26 Sept 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

5 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்

கோவை

கோவை மாநகராட்சியில் தலைமை என்ஜினீயராக நீண்டகாலம் பணியாற்றி வருபவர் லட்சுமணன். இவரது வீட்டிலும், மற்றொரு என்ஜினீயர் சரவணகுமார் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. இந்தநிலையில் கோவை மாநகராட்சி தலைமை என்ஜினீயர் லட்சுமணன் உள்பட 5 அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, கோவை மாநகராட்சி தலைமை என்ஜினீயர் லட்சுமணன், பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு வேறு பணி எதுவும் ஒதுக்கப்பட வில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இது போல் மாநகராட்சி பெண் என்ஜினீயர் பார்வதி, வேலூர் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட அதிகாரியாக இடமாற்றம் செய்யப் பட்டு உள்ளார். மற்றொரு மூத்த என்ஜினீயரான ஞானவேல், ஈரோடு மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உதவி என்ஜினீயர் சரவணகுமார், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு வேறு பணி வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி எஸ்.ரவிச்சந்திரன், மதுரை மாநகராட்சி ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

ஈரோடு மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட அதிகாரி ஆர்.ராமசாமி, கோவை மாநகராட்சி என்ஜினீயராக நியமிக்கப்பட்டு உள்ளார். மதுரை மாநகராட்சி ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்ட அதிகாரி கருப்பாத்தாள், கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரியாக பொறுப்பு ஏற்க உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story