12 பவுன் நகை பறிப்பு


12 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 26 Sep 2021 7:28 PM GMT (Updated: 26 Sep 2021 7:28 PM GMT)

12 பவுன் நகை பறிப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை, 
மதுரை கிருஷ்ணராயர் டேங் சாலை பகுதியை சேர்ந்தவர் விமலாதேவி (வயது61). இவர் ராஜஸ்தானை மாநிலத்தை சேர்ந்தவர். இவரது மகன் மதுரையில் மின்சார பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில் விமலாதேவி, நேதாஜி சாலையில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு வந்த 4 பேர், விமலாதேவியிடம், நாங்களும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள், தாங்கள் அணிந்திருக்கும் நகைகளில் தோஷம் உள்ளது. எனவே, நகைகளை கொடுத்தால், தோஷம் நீக்கித் தருவதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பிய, விமலாதேவி, தான் அணிந்திருந்த 12 பவுன் நகைகளை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். நகைகளை வைத்து மந்திரம் கூறுவது போல் நடித்த அந்த 4 பேரும், சிறிது நேரத்தில் நகையுடன் அங்கிருந்து மாயாகிவிட்டனர். இதுகுறித்து விமலா தேவி அளித்த புகாரின் பேரில் தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story