4 பவுன் நகை திருட்டு


4 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 27 Sept 2021 2:04 AM IST (Updated: 27 Sept 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

புதூர், 
 ஒத்தக்கடை திருமோகூர் சாலை பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 70). இவர் தனது குடும்பத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தனது மகன்களை பார்க்க சென்றுள்ளார்.
இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள்  வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து படுக்கை அறையில் உள்ள பீரோவை இருந்த தங்க நகை 4 பவுன், பிளாட்டினம் வாட்ச் மோதிரம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர் போன் செய்து தகவல் கூறினார்.இதைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து வந்த நடராஜன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது கொள்ளை போனது தெரியவந்தது.உடனடியாக அவர் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story