வாலிபர் மீது வழக்கு
வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள தொந்திலிங்கபுரத்தை சேர்ந்த சின்னையா மகன் வெள்ளைச்சாமி (வயது45). இவர் கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவருடன் மின்பாதை அலுவலர் ஈஸ்வரன் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அவர்கள் அலுவலகத்தில் வைத்து இருந்த 2 செல்போன்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது துணை மின்நிலையம் அருகே நடந்து சென்ற வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் காணாமல்போன 2 செல்போன்களும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் அந்த வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மேலூர் அருகே உள்ள திருவாதவூரை சேர்ந்த மகாலிங்கம் மகன் விஜயராகவன் (24) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story