நண்பர்களுடன் குளித்தபோது கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி என்ஜினீயர் பலி
நண்பர்களுடன் கிருஷ்ணா கால்வாயில் குளித்தபோது நீரில் மூழ்கி கம்யூட்டர் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை,
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் (வயது 26). இவர், ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சஞ்சீவ், தனது நண்பர்களான வானகரத்தை சேர்ந்த ராஜ்குமார் (26), பட்டாபிராம் சோரஞ்சேரியை சேர்ந்த மற்றொரு ராஜ்குமார் (27) ஆகியோருடன் தனது காரில் திருவள்ளூர் சென்றார்.
அப்போது செல்லும் வழியில் அரண்வாயல் பகுதியில் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் செல்லும் இணைப்பு கால்வாயில் இறங்கி நண்பர்கள் 3 பேரும் சந்தோஷமாக குளித்தனர்.
நீரில் மூழ்கி பலி
கால்வாயில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், எதிர்பாராதவிதமாக சஞ்சீவ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் இருவரும், அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. நீரில் மூழ்கிய சஞ்சீவ் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கால்வாயில் சென்ற தண்ணீரை நிறுத்தினர். பின்னர் 5 மணி நேர தேடுதலுக்கு பிறகு சஞ்சீவ் உடலை மீட்டனர். இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story