உசிலம்பட்டி அருகே திடீர் புழுதி புயல்


உசிலம்பட்டி அருகே திடீர் புழுதி புயல்
x
தினத்தந்தி 28 Sept 2021 2:36 AM IST (Updated: 28 Sept 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே நேற்று திடீரென புழுதிப்புயல் உருவானது.

உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே நேற்று திடீரென புழுதிப்புயல் உருவானது.
புழுதிப்புயல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை பகுதியில் நேற்று பலத்த காற்று வீசியது. 
ஒரு கட்டத்தில் புழுதிப்புயலாக உருவெடுத்தது. நிலத்தின் மேல்பகுதியில் உள்ள மண், தூசி, குப்பைகள் அதிக உயரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு சூறாவளி போன்று வீசியது. சற்று நேரம் இந்த நிலை நீடித்தது. அதன் பின்னரும் தொடர்ந்து பலத்த காற்றாக வீசியது.
பருவம் தவறிய காற்றால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதாவது, ஏற்கனவே எழுமலை பகுதியில் சூலப்புரம், குன்னுவார்பட்டி, மலப்புரம், ஓலைப்பட்டி பகுதிகளில் வேர்க்கடலை பயிரிட்டு இருந்தனர்.
நேற்று உருவான புழுதிப் புயலால் அதன் முளைப்பு தன்மையை பாதிக்கும் என்றும், அதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
விவசாயிகள் கருத்து
பொதுவாக ஆடி, ஆவணி மாதங்களில் பலத்த காற்று வீசும். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு காற்று வீசவில்லை.
புரட்டாசி மாதத்தில் மழை தொடங்கும். ஆனால், வங்கக்கடலில் உருவான புயல் நேற்று முன்தினம் கரையை கடந்த நிலையில்தான், தமிழகத்தில் பல இடங்களில் காற்றின் வேகம் அதிகம் இருந்ததாகவும், கடல் சீற்றமாக காணப்பட்டதாகவும் தெரியவருகிறது. இந்த பருவ நிலை மாறுபாடு சகஜ நிலைக்கு மாற வேண்டும் என்றால் காற்றின் வேகம் தணிய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
1 More update

Next Story