மாவட்ட செய்திகள்

கரும்பு ஆலை, பால்பண்ணையில் தீ விபத்து + "||" + Sugarcane plant, dairy fire

கரும்பு ஆலை, பால்பண்ணையில் தீ விபத்து

கரும்பு ஆலை, பால்பண்ணையில் தீ விபத்து
வாடிப்பட்டி அருகே கரும்பு ஆலை, பால்பண்ணையில் தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமானது
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே கரும்பு ஆலை, பால்பண்ணையில் தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.
தீப்பிடித்தது
வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி ஓட்டுபட்டியைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 62). இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் செம்புக்குடிபட்டியில் உள்ளது. அந்த தோட்டத்தையொட்டி அலங்காநல்லூர் சாலையில் கரும்பாலை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை திடீரென்று ஏற்பட்ட மின்கசிவு காரணத்தால் கரும்பு ஆலை மேற்கூரையில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவியது. 
இதனால் வெல்லம் காய்ச்ச வைத்திருந்த கொப்பரை மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த கரும்புச்சக்கை உபகரண பொருட்கள், 3 தென்னைமரங்கள் முழுவதும் எரிந்து நாசமானது. 
பொருட்கள் சேதம்
மேலும் அந்த கருப்பாலையையொட்டி அதே ஊரைச் சேர்ந்த ராஜாங்கம் மனைவி கனகம் என்பவர் நடந்தி வந்த பால் பண்ணை தீ பரவியது. இதனால் பால் பண்ணையின் மேற்கூரை மற்றும் பால் கேன் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து சேதமானது. இதன் சேத மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என தெரிகிறது. 
தீ விபத்து குறித்து தகவலறிந்த அலங்காநல்லூர் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் நள்ளிரவில் வீட்டில் தீ விபத்து; ஒருவர் உயிரிழப்பு
டெல்லியில் நள்ளிரவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
2. புவனகிரி அருகே வேளாண் அலுவலகத்தில் தீ விபத்து ஆவணங்கள் எரிந்து போனதால் விவசாயிகள் அதிர்ச்சி
புவனகிரி அருகே வேளாண் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள் எரிந்து போனதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
3. ஜவுளிக்கடையில் தீ விபத்து
ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
4. டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து
டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
5. வங்கியில் திடீர் தீ விபத்து
கிருஷ்ணராயபுரத்தில் வங்கியில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.