முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
x
தினத்தந்தி 28 Sept 2021 2:36 AM IST (Updated: 28 Sept 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள விடத்தகுளம் கிராமத்தில் இருந்து புளியங்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதையில் கப்பலூர் கண்மாய் உள்ளது. விடத்தகுளம், கப்பலூர் மற்றும் மறவன்குளம் ஆகிய 3 கிராமங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்த இடத்தில் நேற்று சிலர் முதுமக்கள் தாழி போன்று காணப்பட்ட பானை ஓடுகளை அடுத்தடுத்து பார்த்துள்ளனர். கண்மாயில் சுமார் 6 இடங்களில் அடுத்தடுத்து சிதைந்த நிலையில் முதுமக்கள் தாழி பூமியில் புதைந்த நிலையில் காட்சியளித்தது. இதுகுறித்து அவர்கள் விடத்தகுளம் கிராம நிர்வாக அதிகாரி பிரசன்னாவிற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு சென்ற கிராம நிர்வாக அதிகாரி பொதுமக்கள் காட்டிய 6 இடங்களை பார்வையிட்டார். பின்னர் திருமங்கலம் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் அருண்குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் கூறும்போது, சிறிதும் பெரிதுமாய் வட்ட வடிவில் முதுமக்கள் தாழி காட்சியளிக்கிறது. பண்டைய காலத்தில் பயன்படுத்திய முதுமக்கள் தாழி போலவே உள்ளது. ஓடுகள் கருப்பு நிறத்தில் உள்ளது என்றார். இதுதொடர்பாக திருமங்கலம் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் கூறும்போது, விடத்தக்குளம் அருகே கப்பலூர் கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட ஓடுகள், முதுமக்கள் தாழி குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்வார்கள் என்றார்.

Next Story