ஓய்வு பெற்றபெண் நீதிபதிக்கு பாராட்டு விழா


ஓய்வு பெற்றபெண் நீதிபதிக்கு பாராட்டு விழா
x
தினத்தந்தி 28 Sept 2021 2:37 AM IST (Updated: 28 Sept 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்றபெண் நீதிபதிக்கு பாராட்டு விழா

மதுரை
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் பணிபுரியும் நீதிபதிகளில் ஓய்வு பெற்றால் அந்த நீதிபதி ஓய்வு பெறும் நாளில் சென்னையில் தலைமை நீதிபதியுடன் ஒரே அமர்வில் வழக்குகளை விசாரிப்பதும், பின்னர் சென்னையில் உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்படுவது வழக்கம். மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை தொடங்கி 17 ஆண்டுகள் ஆகின்றது. இருப்பினும் இதுவரை உயர் நீதிமன்றக் கிளையில் ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது இல்லை. முதல் முறையாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி டி.கிருஷ்ணவள்ளிக்கு பிரிவு உபசார விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. அவருக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்தார். முன்னதாக தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பேசும்போது, நீதிபதி கிருஷ்ணவள்ளி நெல்லையை சேர்ந்தவர். மதுரை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். 26 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிந்த நிலையில், 2017-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டு உயர் நீதிமன்ற பணியில் இதுவரை 10,207 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார் என்றார்.
நீதிபதி கிருஷ்ணவள்ளி ஏற்புரையில், தன்னை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்த பெற்றோர், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள், உறவினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். நிர்வாக நீதிபதி எம்.துரைசுவாமி மற்றும் நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீரகதிரவன், பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கணொலி காட்சி வழியாக பிரிவு உபசார விழாவில் பங்கேற்றனர்.

Next Story