மழை பெய்ய வேண்டி கிடா வெட்டி அசைவ விருந்து
மழை பெய்ய வேண்டி கிடா வெட்டி அசைவ விருந்து
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே அரசம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ சாத்தா சுவாமி கோவிலில் உலக மக்கள் நன்மை வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் வருடம் தோறும் புரட்டாசி மாதம் சுவாமிக்கு பூஜை நடைபெறும். அதன்படி இந்த வருடமும் சர்க்கரை பொங்கல் வைத்து கிடா, கோழி பலியிட்டு பொதுமக்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சாத்தா சுவாமிக்கு சம்மங்கி, ரோஜா மல்லிகை, உள்ளிட்ட பூ மாலைகள் கொண்டும் அலங்காரமும், தேங்காய், பழம் வைத்து சிறப்பு அபிஷேகமும், பாரம்பரிய வழக்கபடி கொம்பு வாத்தியம் முழங்க பூஜைகள் நடைபெற்றது. இந்தவிழா ஏற்பாடுகளை அரசம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story