கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 29 Sept 2021 2:22 AM IST (Updated: 29 Sept 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

மேலூர்
மேலூரில் கடந்த மாதம் 7-ம் தேதி கேபிள் அலுவலகம் முன்பு காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கேபிள் டி.வி. நிறுவன ஊழியர் பதினெட்டான்குடியை சேர்ந்த ராஜா என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகப்பன்பட்டியைச் சேர்ந்த ரகுநாத் என்பவரை மேலூர் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டதன் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரையின்பேரில் மதுரை கலெக்டர் அனிஷ்சேகர், சிறையில் உள்ள ரகுநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Next Story