நாளை மின்சாரம் நிறுத்தம்
கோரிப்பாளையம், அனுப்பானடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
மதுரை
மதுரை தமுக்கம் மின்பிரிவு பகுதியில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செனாய் நகர், பனகல் ரோடு, ஆழ்வார்புரம், கக்கன் தெரு, புளியன்தோப்பு, ராமையா வீதி, ராமையா தெரு, வைத்தியநாத அய்யர் தெரு, திருவேங்கடபுரம், கோரிப்பாளையம், பட்டறைகார தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சின்ன கண்மாய், எச்.ஏ.கான் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
அதேபோல அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பாகுடி, டி.மார்ட் அருகில், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி அன்பழகன் நகர், மண்டேலாநகர், போஸ்டல் டிரைனிங் காலேஜ், காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, ஏர்போர்ட் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியார் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார். எல்லீஸ்நகர் துணை மின்நிலையம், அனுப்பானடி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ரெயில்வே காலனி முழுவதும், சர்வோதயா தெரு, அன்சாரி நகர், வைத்தியநாதபுரம், டி.பி.ரோடு, சித்தலாசி நகர், ஹாப்பி ஹோம் 1, 2-வது தெரு, எஸ்.டி.சி. ரோடு, ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளிவீதி.
ரெயில்வே ஜங்சன் ஏரியா, டவுன்ஹால் ரோடு, மேல மாரட் வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, காகா தோப்பு ஆகிய பகுதிகளிலும், பழனி ஆறுமுகா நகர், சிந்தாமணி, கண்ணன் காலனி, வினோபாஜி நகர், அனுப்பானடி சிந்தாமணி குறுக்கு ரோடு, ராஜம்மாள் நகர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியார் மோகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story