ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா
ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா
மேலூர்
மேலூர் அருகே வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் வல்லடிகாரர் சாமியையும், ஏழைகாத்த அம்மனையும் காவல் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். புரட்டாசி மாதம் நடைபெறும் ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. விரதம் இருந்து வந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய வழக்கப்படி மாலை மரியாதைகளுடன் 7 சிறுமிகளை அம்மன் தெய்வங்களாக அலங்கரித்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி வந்தனர். இதைதொடர்ந்து மண்ணால் செய்யப்பட்ட பெரிய சேம குதிரை வாகனத்தை பக்தர்கள் சுமந்து வந்தனர். பல்வேறு விதங்களில் நேர்த்திக்கடன்களை செலுத்தி மக்கள் வழிபட்டனர். ஆண் பக்தர்கள் உடலில் வைக்கோலை கயிறுபோல திரித்து சுற்றிக்கொண்டு வந்தனர். பெண் பக்தர்களில் திருமணம் ஆகாதவர்கள் சிறிய மண் பொம்மைகளை சுமந்துவந்தனர். திருமணமான பெண் பக்தர்கள் மண்கலயங்களை அலங்கரித்து சுமந்து வந்தனர். வெள்ளலூரில் தொடங்கி கோட்டநத்தம்பட்டி, அம்பலகாரன்பட்டி விலக்கு வழியாக கோவில்படியில் உள்ள ஏழைகாத்தம்மன் கோவிலுக்கு நடந்து சென்று பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story