கொள்முதலுக்காக திறந்தவெளியில் குவிக்கப்பட்ட நெல்
திருப்பரங்குன்றம் அருகே நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் திறந்தவெளியில் நெல்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் மழையில் நெல்கள் நனைந்து சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் திறந்தவெளியில் நெல்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் மழையில் நெல்கள் நனைந்து சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெல் கொள்முதல்
திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூரில் வைகை தண்ணீரை கொண்டு பல ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் 2-ம் போகமாக நெல் பயிரிட்டு இருந்தனர். தற்போது வயலில் இருந்து நெல் கதிர்களை அறுவடை செய்து அதே பகுதியில் உள்ள அய்யனார்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொள்முதல்நிலையத்திற்கு கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். ஆனால் அங்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் விவசாயிகள் கடந்த 5 நாட்களுக்காக நெல் கொள்முதல் செய்வதற்காக களத்திலேயே காத்து கிடக்கிறார்கள்.
திறந்த வெளி
இதற்கிடையே திறந்து வெளியில் இருப்பதால் மழையில் நெல்கள் நனைந்து முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் வேல்முருகன், பாண்டி, கிருஷ்ணன், முத்துவேல் கூறும்போது, கிராம நிர்வாக அதிகாரியிடம் சிட்டா, அடங்கல் பெற்று கொள்முதல் நிலையத்தில் மூடை மூடையாக நெல் கொண்டுவந்து ஐந்து நாட்களாக காத்துக்கிடக்கிறோம். கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை
ஆனால் அதிகாரிகள் கூறியதாக இடைத்தரகர்கள் வந்து கொள்முதல் செய்வதாக கூறுகிறார்கள். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை இல்லை என்றனர்.
Related Tags :
Next Story