சென்னையில் ஐம்பொன் சிலைகள் சாலையில் கண்டெடுப்பு


சென்னையில் ஐம்பொன் சிலைகள் சாலையில் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 29 Sept 2021 10:52 AM IST (Updated: 29 Sept 2021 10:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னை திருவல்லிக்கேணியில் 3 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் சாலையில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணியில் ஆறுமுகப்பா தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வாசலில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலைகளை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஜாம்பஜார் போலீசார், அங்கிருந்த சிலைகளை மீட்டனர். அதில் முக்கால் அடி அம்மன் சிலை, ஒரு அடி கிருஷ்ணர் சிலை மற்றும் ஒரு அன்னபூரணி சிலை ஆகியை இருந்தன. சிலைகளை வைத்துவிட்டுச் சென்றது யார் என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிலைகள் கோவிலில் வைத்து வழிபடப்பட்டவையா அல்லது கடத்தி வரப்பட்டவையா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story