கோபி பஸ் நிலையம் அருகில் வணிக வளாக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது
கோபி பஸ் நிலையம் அருகே வணிக வளாக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது. யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
கோபி பஸ் நிலையம் அருகே வணிக வளாக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது. யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மேற்கூரை இடிந்தது
கோபி பஸ் நிலையம் எதிரே நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது, இந்த வணிக வளாகத்தில் 2 தளங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஜெராக்ஸ், நொறுக்கு தீனி, புடவை, தேனீரகம், ஸ்டூடியோக்கள், டில்லர் உபரி பாகங்கள், சைக்கிள், மோட்டார்சைக்கிள் நிறுத்தம், செல்போன் பழுதுபார்த்தல் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன.
பஸ் நிலையம் அருகே உள்ளதால் தினமும் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 500 முதல் 1000 பேர் வரை இந்த வணிக வளாகத்துக்கு வந்து செல்வது வழக்கம்.
உயிர்சேதம் தவிர்ப்பு
இந்த நிலையில் கோபி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வணிக வளாகம் கட்டிடம் வலுவிழந்து பழுதடைந்திருந்தது. இதில் முதல் தள மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் நேற்று காலை இடிந்து கீழே விழுந்தது. இதனால் கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமானது.
அப்போது நல்லவேளையாக அந்தப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
சீரமைக்கப்படுமா?
இந்த வணிக வளாக கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் விரிசல் விட்டும், வணிக வளாகத்தின் கழிவறையின் மேற்கூரை விரிசலுடன் ஆபத்தான நிலையிலும் காணப்படுகிறது. மேலும் மின் ஒயர்கள் அறுந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வணிக வளாகத்தில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே பேராபத்து ஏற்படுவதற்கு முன்பு நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு, பொது மக்களின் நலன் கருதி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story