புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x
தினத்தந்தி 29 Sept 2021 9:19 PM IST (Updated: 29 Sept 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா் பெட்டி

குழியை மூட வேண்டும்
ஈரோடு சூரம்பட்டிவலசு ராஜாஜி வீதியில் கடந்்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டது. பின்னர் அந்த குழி மூடப்பட்டது. ஆனால் அந்த குழி சரியாக மூடப்படவில்லை. இதனால் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன்காரணமாக இந்த வீதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழியை மூடவேண்டும்.
ஏ.கோமதி, சூரம்பட்டி, ஈரோடு.
சாலை அமைக்கப்படுமா?
நம்பியூர் தாலுகா கடத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட சூளைத்தோட்டம் பகுதியில் இருந்து ஊஞ்சப்பாளையம் வரை செல்லும் சாலையில் இரு புறங்களிலும் முட்செடிகள் வளர்ந்து மாட்டு வண்டி மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. இதனால் கரும்பு, வாழை, ெநல் போன்ற விவசாய விளைபொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல முடியவில்லை. எனவே அங்கு தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வெங்கிடுசாமி, ஊஞ்சப்பாளையம்.
தேங்கி கிடக்கும் குப்பை
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளிக்கூட மைதானம் அருகில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. பல நாட்களாக குப்பைகள் தேங்கி கிடப்பதால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பையை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மாணிக்கம்பாளையம்.
தெருவிளக்குகள் எரியவில்லை
பாசூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி ராமலிங்கம்புதூர் கரடு. இங்குள்ள 3 தெருவிளக்குகள் கடந்த 4 மாதங்களாக எரியவில்லை. இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே தெருவிளக்கு எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சண்முகம், பாசூர்.
புதர் மண்டி கிடக்கும் சாக்கடை 
மொடக்குறிச்சி தாலுகா பூந்துறை சேமூர் ஊராட்சி ெபருமாபாளையம் காலனி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேற முடியாத அளவுக்கு புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்குவதுடன், கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், பெருமாபாளையம்.
குடிநீர் குழாய் உடைப்பு
ஈரோடு பெரிய சேமூர் சீனாங்காடு முதல் வீதியில் குடிநீர் குழாய் 4 இடங்களில் உடைந்துள்ளது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் வீணாகி தேங்கியுள்ளது. இதில் கொசுக்களும் உற்பத்தியாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குடிநீர் குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும்.
தரண்யா, பெரியசேமூர்.
புதிதாக கழிப்பறை வேண்டும்
பவானி தாலுகா பருவாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சத்தியா நகர் ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடம் சிதிலமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டி உள்ளது. எனவே இங்கு பழைய கழிப்பறையை அகற்றிவிட்டு புதிதாக கழிப்பறை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், சத்தியா நகர்.
சாக்கடை வசதி
ஈரோடு மாநகராட்சி 33-வது வார்டுக்கு உள்பட்ட திண்டல் பி.கே.என். நகரில் சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கழிவுநீ்ர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ், திண்டல்.
பாராட்டு
சத்தியமங்கலம் சந்தன டெப்போ ரோடு தண்டுமாரியம்மன் கோவில் வீதியில் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கொண்டிருந்தது. இதுபற்றி  ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து அது சரி செய்யப்பட்டு விட்டது. ஆகவே தண்ணீர் வீணாவதை சரிசெய்ய உதவிய ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், சத்தியமங்கலம்.

Next Story