ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.55 மீண்டும் ரூ.100 நெருங்குவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 55 காசுகளுக்கு விற்பனையானது. மீண்டும் ரூ.100 நெருங்குவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 55 காசுகளுக்கு விற்பனையானது. மீண்டும் ரூ.100 நெருங்குவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பெட்ரோல்-டீசல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஈரோடு மாவட்டத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்து விற்பனையானது. அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.102 வரை விற்பனையானது.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உள்பட சாதாரண பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.
விலை உயர்வு
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி புதிதாக பொறுப்பேற்ற அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து உத்தரவிட்டது. இதனால் பெட்ரோல் விலை ரூ.100-யை விட குறைந்தது. இது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி கொண்டே சென்றன. இதன்காரணமாக விலை உயர்வு ஏற்பட்டு மீண்டும் ரூ.100 நெருங்கும் நிலை உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 55 காசுகளுக்கு விற்பனையானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 57 காசுக்கு விற்கப்பட்டது. எனவே பெட்ரோல்-டீசல் விலை கட்டுக்குள் கொண்டு வரப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
Related Tags :
Next Story